OM NAMASIVAYA

பாரோடு விண்ணாய்ப் பரந்த எம் பரனே பற்று நான் மற்று இலேன் கண்டாய் சீரோடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே ஆரோடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருள் இலையானால் வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே.

………………….திருவாசகம்

எங்கும் நிறைந்துள்ள மேலோனே. உன்னையே நான் கதியாகக் கொண்டவன். உனது ஆட்சியோ ஒருங்குப்பாடு உடையது. அத்தகைய நீ என்னை ஆட்கொண்ட பின் அருள்புரியாவிடின் இந்த சங்கடத்தை முன்னிட்டு யாரை நொந்து கொள்வது, யாரிடம் குறைகூறுவது? இவ்வுலக   வாழ்க்கை எனக்கு வேண்டாம். நீயே என்னை ஏற்றுக்கொள். விளக்கம்

…………………. சுவாமி சித்பவானந்த மகாராஜ்

மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம் ஒன்றறியேன் மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை அறியேன் திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான் செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில் ஓர் இடத்தே இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் எந்தைபிரான் மணிமன்றம் எய்த அறிவேனோ இருந்ததிசை சொல அறியேன் எங்ஙனம்நான் புகுவேன் யார்க்குரைப்பேன் என்ன என்னசெய்வேன் ஏதும் அறிந்திலனே

……………………………………………………………….  சிதம்பரம் இராமலிங்க வள்ளலார்

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் பேயேனது உள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச் சீ ஏதும் இல்லாது என் செய்பணிகள் கொண்டருளும் தாயான ஈசற்கே சென்று ஊதாய் கூத்தும்பீ.

………………….திருவாசகம்

நாய் போன்ற என்னைக் கருவியாகக்கொண்டு இறைவன் தன்னைப் புகழ்வித்துக்கொண்டான். பேய்போன்ற என் மனக் குறைபாடுகளைப் பொறுக்கும் பெருமை அவனுடையது. என் பணிவிடைகளை இகழாது அவன் ஏற்றுக்கொண்டான்.அவன் தாய் போன்றவன்.

விளக்கம்

…………………. சுவாமி சித்பவானந்த மகாராஜ்

சாட்டையில் பம்பர ஜாலம் போல் எலாம் ஆட்டுவான் இறைஎன அறிந்து நெஞ்சமே! தேட்டம்ஒன்று அற, அருள் செயலில் நிற்றியேல், வீட்டறம் துறவறம் இரண்டும் மேன்மையே.

………………………………………..தாயுமானவர் பாடல்

உலகத்தவர்க்கு ஏசுநாதர் கொடுத்துள்ள முடிவான செய்தி இது. உலகத்தவர் அனைவரும் அவரவர் உடலம் என்னும் சிலுவையைத் தூக்கிக்கொண்டு நாள்தோறும் மரணத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அவர்களுடைய ஞாபகத்தில் இருப்பதில்லை, உலக வாழ்வு நித்தியமானதென்று அதில் மகிழ்ந்து ஊறிக்கிடகின்றனர். வாழ்வில் பற்று வைத்துள்ள ஒவ்வொருவனும் நாளைக்கு மரணத்தை அறிந்துகொள்கின்ற பொழுது கதறி அழுதாக வேண்டும். வாழ்ந்திருப்பதையும், மறைந்து போவதையும் பொருள்படுத்தாது கடவுளுடைய திருவடியிலேயே மனதை நாட்டி வைத்திருப்பவன் மரணத்துக்கு அஞ்சுவதில்லை. அது எத்தகைய கொடிய வடிவெடுத்து வந்தாலும் அவனைத் துன்புறுத்தாது. தமது சீரிய செயலின் மூலம் இச்சிறந்த பாடத்தை ஏசுநாதர் உலகுக்கு அளிக்கிறார்.

………………………. சுவாமி சித்பவானந்தர்

கே : சம்சாரத்துல இருந்துகிட்டே ஆத்மசாதனை பண்ணலாமா?

ப  : ஆமாம் கண்டிப்பா அப்படித்தான் பண்ணனும்.

கே : சம்சாரம் தடையில்லையா? சாஸ்திரங்கள் துறவை வலியுருத்துதே?

ப  : சம்சாரம் நம்மளோட மனசிலேதான் இருக்கு. உலகம் உங்ககிட்டே சொல்லித்தா “நான் உலகம்ன்னு”. இல்லனா …. அது எப்பவும் இருக்கணும். தூங்கும்போதும் கூட. தூங்கும்போது உலகம் இல்லாததாலே அது அநித்தியம். அநித்தியமா இருக்கிறதாலே…… அதுலே சரம் இல்லை. சாரம் இல்லாததாலே…. ஆத்மவாலே சம்ஹாரம் செய்யப்படும். ஆத்மா மட்டுமே நித்தியம். துரவுன்னா……….. அனாத்மாவோட சேராமஇருக்கறது தான். அஞ்ஞானம் நீங்கினா…… துறக்குறதுக்கு எதுவும் இருக்காது. இதுதான் உண்மையான துறவு.

கே : அப்போ நீங்க ஏன் சின்னவயசிலேயே வீட்டை விட்டு ஓடிவந்தீங்க?

ப  : அது என் பிராப்தம், ஒவ்வோருத்தரோட வாழ்க்கையும் அவரவர் பிராரப்தத்தை பொறுத்தது. என் பிராப்தம் இப்படி. உங்களோட பிராப்தம் அப்படி.

கே : அப்போ நான் ஏன் வீட்டை விட்டு ஓடி வரக்கூடாது?

ப  : உங்க பிராப்தம் அப்படின்னா இந்த கேள்வியே கேக்க மாட்டேள்.

………………..ஸ்ரீ ரமணமஹரிஷி

Advertisements